Saturday, September 5, 2009

சுதந்திரச் சிந்தனை

நள்ளிரவில் பெற்றதால் சுதந்திரம் இன்னும் விழிக்கவில்லை,
பாரதி கண்ட கனவு பளிக்கவில்லை,
பாலைவனம் சோலைவனம் ஆகவில்லை,
காந்தி கண்ட ராமராஜ்யம் தழைக்கவில்லை,
நேரு கண்ட அமைதிப் பூங்கா பூக்கவில்லை.

ஆதியில் இல்லை ஜாதி,
பாதியில் வந்ததேன் யோசி,
காந்தியும் நேருவும் கண்ட பாதை,
அதை தேர்ந்திட உனக்கேன் உபாதை.

பாரத மண்ணே இனி உன்னை உலகம் போற்றும் நாடாக மாற்றுவோம், பாரதி கண்ட கனவை பளிக்க‌ச் செய்வோம்,
காந்தி கண்ட ராமராஜ்யம் தழைக்கச் செய்வோம்,
நேரு கண்ட அமைதிப் பூங்கா பூக்கச் செய்வோம்.

அடிமை விலங்கிட்டு நீ சிந்திய க‌ண்ணீரை செந்நீரால் குளிப்பாட்டி,
இன்னுயிர் ஈர்த்த த‌ங்க‌ங்க‌ளுக்கு இந்த‌ப் பொன் நாளில்,
உன் சீர‌டி போற்றி, வாழ்த்துவோமாக‌ , நீ வாழி வாழி வாழி!!!

1 comment:

Palani K said...

ennamoo poda pinnureee neeee...nalla irukku. Nee Gandhiyavaadiyoooo???roomba varai pathi nadai ulladheyyyy...