Tuesday, October 27, 2009

சிந்தனைக்கு...


ஒரு தத்துவ இயல் பேராசிரியர் தன்னுடைய வகுப்பில் பாடத்தை துவங்கு வதற்கு முன்னர் கையில் ஒரு சில பொருட்களுடன் அமைதியாக மாணவர்கள் எதிரிலேயே நின்று கொண்டிருந்தார். வகுப்பு ஆரம்பித்த உடன் எதுவும் பேசாமல் தனது கையிலிருந்த பெரிய ஜாடியினை மாணவர்களின் முன் வைத்து அந்த வெற்று ஜாடியினுள் ஒரு சில கோல்ப் பந்துகளை இட்டு அதனை நிறைத்தார்.

அவ்வாறு செய்த பிறகு மாணவர்களைப் பார்த்து இந்த ஜாடி நிறைந்து விட்டதா? என வினவினார். மாணவர்களும் நிறைந்தது என ஒப்புக் கொண்டனர். அதன் பிறகு பேராசிரியர் தான் கொண்டு வந்திருந்த கூழாங்கற்களை எடுத்து அதனையும் அந்த ஜாடிக்குள் போட்டு குலுக்கினார். அந்த கூழாங்கற்கள் கோல்ப் பந்துகளின் உள்ள இடைவெளிகளில் நிரம்பியது. மீண்டும் மாணவர்களைப் பார்த்து இந்த ஜாடி நிறைந்து விட்டதா? என வினவினார். மாணவர்களும் ஒருமித்த‌ குர‌லில் ஒப்புக் கொண்டனர்.

அடுத்தாக‌ பேராசிரிய‌ர் ம‌ணல் நிர‌ம்பிய‌ பெட்டியினை எடுத்து அந்த பெட்டியிலிருந்து ஜாடியினுள் ம‌ணலைக் கொட்டினார். இப்பொழுது ஜாடியினை மணலான‌து முழுவ‌துமாக‌ நிர‌ம்பியிருந்த‌து. மீண்டும் ஒரு முறை இந்த ஜாடி நிறைந்து விட்டதா? என வினவினார். மாணவர்களும் ஆம் என‌ ஒப்புக் கொண்ட‌ன‌ர். மேலும் பேராசிரிய‌ர் இர‌ண்டு குவ‌ளையில் தேநீர் த‌யாரித்து அத‌னையும் அந்த‌ ஜாடியினுள் ஊற்றினார். அந்த‌ தேநீரான‌து எஞ்சியுள்ள‌ அனைத்து வெற்று இட‌ங்க‌ளையும் மணல்க‌ளின் உள்ளே சென்று நிர‌ம்பிய‌து. இத‌னைக் கண்ட‌ மாண‌வர்க‌ள் அனைவரும் சிரித்த‌ன‌ர்.

பேராசிரியர் புன்முறுவலோடு புன்னகைத்த வண்ணம் மாணவர்களைப் பார்த்து இந்த ஜாடியானது உங்களுடைய வாழ்வைக் குறிக்கிறது. முதலில் இட்ட கோல்ப் பந்துகளானது வாழ்வின் முக்கிய அம்சங்களான கடவுள், குடும்பம், உங்களது ஆரோக்கியம், தோழமைகள் மற்றும் உள் விருப்பங்களைக் குறிக்கிறது. வாழ்வில் மற்றவைகளை இழந்தாலும் மேற்சொன்ன வ‌ற்றை நாம் கொண்டு இருப்போமேயானால் நமது வாழ்வானது நிறைவடைந்ததாக இருக்கும். அடுத்ததாக ஜாடியினுள் போட்ட கூழாங்கற்கள் உங்களுடைய வேலை, இல்லம் மற்றும் அன்றாட தேவைகளுக்கு பயன்படும் வாகனங்கள் போன்றவைகளாகும். மூன்றாவதாக இடப்பட்ட மணலானது மற்ற அனைத்து உலக விசயங்களைப் போன்றவைகளாகும். அவை சிறியதாக இருந்தாலும் முழுதுமாய் நிரம்பியதை கவனித்தீர்களல்லவா?

நீங்க‌ள் முத‌லாவ‌தாக‌ ம‌ண‌லை ஜாடியினுள் நிர‌ப்பி விட்டீர்க‌ளேயானால் கோல்ப் ப‌ந்துக‌ளுக்கும், கூழாங்க‌ற்க‌ளுக்கும் இட‌ம் இல்லாம‌ல் போய்விடும் என்றார் பேராசிரிய‌ர். அத‌னைப்போன்று தான் ந‌ம் வாழ்வும் ம‌ணல் போன்ற‌ சின்னஞ்சிறிய‌ விச‌ய‌ங்க‌ளுக்கெல்லாம் உங்க‌ள‌து நேர‌ம் மற்றும் ச‌க்தியை செல‌விட்டீர்க‌ளேயானால் உங்க‌ள் வாழ்வும் ம‌கிழ்ச்சியாக‌ அமையாது என்றார். கோல்ப் ப‌ந்துக‌ளை முத‌லில் க‌வ‌னியுங்க‌ள். அவை தான் மிக‌ முக்கிய‌மான‌வைக‌ளாகும். மற்ற‌தை ஒதுக்கி விடுங்க‌ள்.

இத‌னைக் கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்த‌ மாணவ‌ர்க‌ளில் ஒருவ‌ன் த‌ன‌து கையினை உய‌ர்த்தி தேநீரான‌து எதைக் குறிக்கிற‌து என‌ ஆர்வ‌முட‌ன் கேட்டான். பேராசிரியர் சிரித்த‌ப‌டியே உன‌து கேள்வியால் நான் பெரும‌கிழ்ச்சி அடைகின்றேன் என‌க் கூறி உங்க‌ள‌து வாழ்க்கை என்ற‌ ஜாடி எவ்வ‌ளவு தான் நிறைந்து இருந்தாலும் நண்பர்க‌ளுட‌ன் தேநீர் அருந்த‌ இருமுறை நேர‌ம் ஒதுக்குங்க‌ள் என்றார்.

உங்க‌ள‌து வாழ்க்கையில் பிர‌ச்ச‌னைக‌ளை கையாள்வ‌து மிக‌வும் க‌டின‌மாக‌த் தோன்றினால் ஒரு நாளில் உள்ள‌ 24 ம‌ணி நேர‌ம் போதுமான‌தாக இல்லையென்று தோன்றினால் இந்த‌ ஜாடி ம‌ற்றும் தேநீரை நினைவு கூறுங்க‌ள்.

2 comments:

Sudarsan said...

good one. Though the story is old, i feel you have framed them in your own way.... keep going.

Palani K said...

Dei Sudarsana, he didn't framed it the same words I have read it many times in english and tamil.

Good thing is he recalled it. Old Wine always tastes good.