ஒரு ஊரில் ஒரு கணக்கு வாத்தியார் இருந்தார். அவர் பெயர் ரங்கசாமி. ஊரே அவரை மரியாதையுடன் வணங்கியது. அவருக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உண்டு. மகன் பெரியவன், பெயர் முருகன். மகள் ராதா. பள்ளிக்கூடத்தில் 10-ஆம் வகுப்பு வரை கணக்கு சொல்லி கொடுத்து வந்தார் ரங்கன்.. அவர் மகனும் அதே பள்ளியில் 6-ஆம் வகுப்பிலும், மகள் 4-ஆம் வகுப்பிலும் படித்து வந்தனர். நல்ல பாசமான குடும்பம் அது.
வாத்திக்கு அவன் மகன் கணக்கு வாத்தியார் ஆக வேண்டும் என்று ஒரு பெரிய ஆசை. மகன் முருகன் படிப்பில் சற்று மட்டம் தான். அவனுக்கு கணக்கு பாடம் சுட்டு போட்டாலும் 'வரும் ஆனா வராது'. அதே வகுப்பில் மூட்டை தூக்கும் ராமசாமி மகன் குமரன் நன்கு படித்து வந்தான். கணக்கில் நூற்றுக்கு நூறு எடுப்பான். தன் பாடத்தில் நன்கு படிப்பதால், வாத்திக்கு குமரன் மேல் கொள்ள இஷ்டம். தன் மகனை அவருக்கு பிடிக்கவே பிடிக்காது. கணக்கில் மதிப்பெண் குறைவாக வாங்குவதால், தினமும் வீட்டில் அவரிடம் பிரம்படி வாங்குவான் முருகன். தாய் லட்சுமி எவ்வளவு தடுத்தும் அடி மிகவும் பலமாக தான் விழும்.
பாவம் மகன். என்ன செய்வான், அவனால் அவ்வளவு தான் படிக்க முடிந்தது.
நாட்கள் சென்றன. அப்போது முருகன் 9-ஆம் வகுப்பு படித்து வந்தான். சில நாளில் முருகனுக்குள் இருக்கும் திறமை வெளியே வர தொடங்கியது. அவன் மின்சாரம் மூலம் இயங்கும் வானொலி மற்றும் அழைப்பொலி போன்ற வற்றை செய்யும் திறனை வெளிக்காட்டினான். இதை கண்டு பூரிப்பு அடைந்தனர் அவன் தாய், தங்கை மற்றும் சுற்ரத்தினர். ஆனால் 'படிப்பே வராது உனக்கு எதுக்கு இந்த கண்டு பிடிப்பு என்று சொல்லி', அதை தூக்கி குப்பை தொட்டியில் போட்டார் கணக்கு வாத்தி தந்தை. சோகத்தில் குமுறி அழுது அடங்கினான் மகன். தாய் அவனை ஆறுதல் படுத்தி பள்ளிக்கூடம் தங்கையுடன் போ என்று வழி அனுப்பி வைத்தாள்.
சரியாக படிக்காததால் நல்ல மதிப்பெண் முருகனால் எடுக்க முடியவில்லை. 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 60 விழுக்காடு மட்டுமே அவனால் எடுக்க முடிந்தது. கணக்கில் நூற்றுக்கு ஐம்பது மதிப்பெண் தான் எடுத்தான். மற்ற பாடங்களிலும் எழுவதை தாண்ட வில்லை அவன். ஆத்திரம் அடைந்தார் வாத்தி. பிரம்படி மீண்டும் தொடங்கியது. என்னோட ஆசை மீது இப்படி மண்ணு அள்ளி போட்டுட்டியே என்று சொன்ன வாரே விடாமல் அடித்து ஓய்ந்தார். வீடே சோகத்தில் இருந்தது.
ஒரு வாரம் கழித்து முருகன் தந்தையிடம் பாலிடெக்நிக் படிக்க வேண்டும் என்று கூறினான். எதையாவுது படித்து தொல என்று சொல்லி விட்டு பள்ளிக்கு கிளம்பினார்.
சற்று காலத்தில் பாலிடெகினிக் படிப்பை முடித்து டிப்ளமா'வும் முடித்தான். மூன்று வருடங்கள் சென்றன. வாத்தி'க்கும் வர வர உடம்பு சரி இல்லாம போக ஆரம்பித்தது. வெறும் 6000 ரூபாய் சமப்ளம் வாங்கி வந்த அவரால் குடும்பச் செலவையும், மருந்து செலவையும் சமாளிக்க முடியவில்லை. மகன் வேலை தேட ஆரம்பித்தான். அவனோட திறமைக்கு ஒரு வாரத்திலேயே அவனுக்கு ஒரு நல்ல கம்பணியில் மெக்கானிக்'காக வேலை கிடைத்தது. மாதச் சம்பளம் 8000 ரூபாய் என்று தன் தாய் தந்தையிடம் சொன்னான். தாய் மிக்க மகிழ்ச்சி அடைந்தாள். தந்தை வாழ்த்த வாயின்றி வாழ்த்தினார்.
இது நடந்த இரண்டு வாரத்திற்கு பிறகு தந்தை உடம்பு மிகவும் மோசமானது. மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நல்ல வேளை மகன் சம்பாதிப்பதால் குடும்பத்தில் பணத் தட்டுப்பாடு தெரியவில்லை. உடம்பு சரியாகி குணமான தந்தை தன் மகனை பார்க்க வேண்டும் என்று ஆசைபட்டார். மகன் அவரை பார்க்க வந்தான். 'என்னை மன்னிப்பாயா என்று தன் மகனை கட்டிப் பிடித்து கதறி அழ ஆரம்பித்தார் தந்தை. உன்னை எவ்வளவோ கஷ்டப் படுத்தி இருக்கிறேன். அப்படி இருந்தும் என்னை, நீயும் உன் பணமும் தான் காப்பாற்றியது என்றார் வாத்தி'. இதற்கு உடனே மகன் இது என் கடமை என்றுச் சொல்லி அவரை ஆறுதல் படுத்தினான்.
முடிவில் தந்தை அவனை ஒரு நாள் அழைத்து அவனிடம் கூறியதாவது. 'மகனே, நீ கணக்கில் சிறந்து விளங்க வேண்டும் என்று ஆசை பட்டு உன் ஆசை என்ன வென்று அறிய மறந்தேன். இறுதியில் உன் திறமையாலும் உழைப்பாலும் நீ வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்தாய்' என்றார்.
என்னோட கருத்து : எது செய்கிறோம் என்பது முக்கியம் இல்லை. எவ்வாறு செய்தால் முன்னேறலாம் என்பது தான் முக்கியம். பிடித்த ஒன்றை எடுத்துச் செய்வதை விட, கிடைத்த ஒன்றைப் பிடித்துச் செய்தால் வாழ்க்கையில் சீக்கிரம் முன்னேற்றப் பாதைக்கு போலாம்.. இது தான் இன்றைய சிந்தனை.
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
அடிச்சு ஆடு ரகு...
வாழ்த்துக்கள்!!!
Super Raghu....
All the Best
Nee oru sindhanai sirpi ada...irumbu uli kondu un moozhai sedhukka padavillai, pena koorr maiyinal sedhukka pattadhu...SUndar C matrum andha Malayala padathai konjam maathitta neeyyy...
\PalaniK
Dude, I doff my hat to this exemplary work of yours. what a revelation it has been. Do not stop writing as you have raised the benchmark it is going to be a feast for every visitor of this space.....
That was one awesome piece!
Please change your theme.....
Post a Comment