Tuesday, August 25, 2009

இரு வரிச் சிந்தனை (கற்பனை மட்டுமே)

கடவுள்

உயிருள்ளவர் உருவமற்றவர்;
ஒளியானவர் ஒலிக்கு அப்பாற்பட்டவர்.


தாய்

ஆதி முதல் நம்மிடம் ஏமாந்துப் போவாள்;
இறுதிவரை நம்மிடம் உண்மையாக இருப்பாள்.


காதலி

ஆதி முதல் நம்மிடம் பொய்யாக‌ இருப்பாள்;
இறுதியில் நம்மை ஏமாற்றி விட்டுப் போவாள்.


நட்பு

இதன் வருகை இயல்பு;
கிடைத்துவிட்டால் என்றென்றும் சிறப்பு.



சூரியன்(ஆண்) ‍‍‍

முதலில் சுட்டெரிப்பாய்;
இறுதியில் குளிர்ச்சி தருவாய்.


நிலா(பெண்)

முதலில் குளிரச் செய்து;
இறுதியில் சுட்டெரிப்பாய்.


மனசாட்சி

தவறு செய்தால் நம்மைத் தூங்க விடாது;
நன்மை செய்தால் நம்முள் தங்க விடாது.


வாலிபம்

பருவத்தில் இவன் என்றும் ராஜா;
தேடிச் செல்லும் இடமோ ரோஜா.


பெண்

நில் கவனி செல்;
செல்லாவிட்டால் நடுத் தெருவில் நில்.


மனிதன்

ஆறறிவைப் பெற்றவன்;
அறிவற்றுக் கிடப்பவன்.

1 comment:

Anonymous said...

en ungaluku ivalavu sogam