Wednesday, September 23, 2009

எங்கள் வீட்டிலும் நவராத்திரி...

வருஷா வருஷம் நவராத்திரினா எல்லாருக்கும் கொலு வைப்பதே நியாபகத்திற்கு வரும். ஆனா எனக்கு மட்டும் சாயங்காலம் கிடைக்கிற சுண்டல் போன்ற பலகாரம் தான் நியாபகத்திற்கு வருது. நல்ல பண்டிகை தானே??











பள்ளிக்கூடப் பசங்களுக்கும் ஒரே சந்தோஷம் தான். இப்ப காலாண்டுத் தேர்வு விடுமுறையில் இருப்பாங்க.

எதுக்கு நவராத்திரியான 9 நாள் பண்டிகையை நம்ம கொண்டாடுறோம்?? முதல் 3 நாட்கள் தைரியத்தின் வடிவமான மஹாகாளியை வணங்குவதும், அடுத்த 3 நாட்கள் செல்வத்தின் சொருபமான மஹாலஷ்மியை வணங்குவதும், இறுதி 3 நாட்கள் கல்வி தேவியான மஹாசரஸ்வதியை வணங்குவதும் வழக்கம். இதுவே மரபும் ஆகும்.

'ராத்திரி' என்றால் மாற்றத்தை குறிக்கும். பூமி சுற்றுவது இயல்பு, பகலும் இரவும் மாறி மாறி வருவதற்கு இதுவே காரணம் ஆகும். ஆதி காலத்தில் இந்த மாற்றத்தை தாக்குப்பிடிக்க நவராத்திரி வழிபாடு செய்வது ஐதீகம். இதுவே அறிவியல் காரணமும் ஆகும்.

வ‌ர‌லாற்றில் இராம‌ன் இராவண‌னை 9 நாட்கள் போராடி வ‌த‌ம் செய்த‌தும், ம‌ஹிஷாசுர‌ன் என்னும் அசுர‌னை ம‌ஹாதேவியான காளி 9 நாட்கள் வ‌த‌ம் செய்த‌தும் நவராத்திரி பண்டிகையை கொண்டாட‌ காரணமாக‌ கூறுவ‌து உண்டு.

கொலு ஏன் வைக்கிறோம்? 'கொலு' என்றால் ஒரு பெரும் ப‌ல‌ம்(sovereign) பொருந்திய ஒருவர் அர‌ச‌வையில் அம‌ர்ந்திருப்ப்து என்று அர்த்த‌ம். இந்த‌ கொலு பொம்மைக‌ளை வைப்பதால் ம‌ஹிஷாசுரமர்த்தினியே வீட்டில் இருப்பது போல் நம்பிக்கையாம்.

3 comments:

Palani K said...

When I read the first line abt to say who think abt golu, its all abt sundal and immed next line u said so...ellorum onna thaan sila vishayangalil think pannuroom.

Ok, gnayabagam spelling mistake, don't repeat such things.

Raghunath said...

Changed it as per you advised Ji. How was the previous Kavithai post??

Sudarsan said...

Dei thambi..... nadathuda.....